
TA SILVERS
குங்கும சிமில் மற்றும்
அகல் விளக்கு
வீட்டில் நாம் வாங்கி வைக்கும் முக்கியமான சில பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. முக்கியமாக உணவு தானியங்கள், கல் உப்பு, ஊறுகாய், அரிசி, மஞ்சள் போன்ற பொருட்களை வீட்டில் வாங்கி வைக்கும் பொழுது எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் வீட்டில் தெய்வ கடாட்சத்தை நிலைத்து நிற்க செய்ய முடியும் என்பது சாஸ்திரம் கூறும் நம்பிக்கை. அவ்வரிசையில் இந்த ஒரு பொருளும் வீட்டில் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்அதே போல வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்களில் மஞ்சளும், குங்குமமும் அடங்கும். வீட்டின் மங்களகரமான பொருட்களாக இருக்கும் இந்த மஞ்சள் மற்றும் குங்குமம் வீட்டில் எப்பொழுதும் குறையவே கூடாது. இவற்றை முழுமையாக தீர்ந்த பிறகு வாங்குவது என்பது தவறான செயலாகும். தீர்ந்து போகும் முன்பே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குங்குமத்தை குறையாமல் பார்த்துக் கொண்டால் அந்த வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.தினந்தோறும் நெற்றியில் குங்குமச் சிமிழில் இருந்து எடுத்து வைக்கப்படும் குங்குமத்தை சுமங்கலிப் பெண்கள் கிழக்கு நோக்கி வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய மாங்கல்ய பலம் கூடும்.